VIDEO: 'கெத்தா' நடந்து வரான்... கேட்டையெல்லாம் 'கடந்து' வரான்... இந்த குட்டிப்பையன் 'யாருன்னு' தெரியுதா?
முகப்பு > செய்திகள் > உலகம்சமீபத்தில் குவாடன் என்னும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 9 வயது குட்டிப்பையன் தன்னை சக மாணவர்கள் கிண்டல் செய்வதால், தற்கொலை செய்து கொள்வதற்கு கயிறு கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உலகம் முழுவதும் இருந்து சிறுவனுக்கு தங்கள் அன்பை அனுப்புவதாக உருக்கத்துடன் தெரிவித்தனர். பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய அன்பை குவாடனுக்கு பகிர்ந்தனர்.

இந்த நிலையில் குவாடனுக்கு ஆஸ்திரேலிய நாட்டின் உள்ளூர் ரக்பி அணியை வழிநடத்தும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. ரக்பி வீரர்கள் போல டீசர்ட் அணிந்து காதில் ஹெட்போனுடன் வீரர்களின் கைபிடித்து மைதானத்திற்குள் வந்த குவாடனுக்கு, அங்கு கூடியிருந்த மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து ரக்பி போட்டியையும் குவாடன் துவக்கி வைத்தார். தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து குவாடன் மகிழ்ந்து சிரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
