VIDEO: ஆடாம, அசையாம 'அப்டியே' நில்லுங்க... 'இந்தா' வந்துறேன்... திடீரென 'தலைதெறிக்க' ஓடிய கேப்டன்... திகைத்துப்போன ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் போட்டிகளில் அவ்வப்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோன்ற வீடியோக்கள் எக்கச்சக்கமாக வைரலாகும். சில நேரங்களில் அது காமெடியாகவும் அமைந்து விடுவதுண்டு. அது போன்ற ஒரு சம்பவம் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் நாள் டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ளது.
— Rohit Sharma Fan Club (@DeepPhuyal) February 21, 2020
46-வது ஓவரை சவுத்தி வீசினார். 3-வது பந்தை வீச சவுத்தி தயாராக நிற்க மறுபுறம் எதிர்முனையில் பண்ட் பந்தை எதிர்கொள்ள ஆயத்த நிலையில் நிற்கிறார். பந்து போடப்போகும் சமயத்தில் காற்று சற்று பலமாக அடிக்க நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனின் தலையில் இருந்த தொப்பி கீழே விழுந்து பவுண்டரி லைனை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டது.
இதைப்பார்த்த வில்லியம்சன் தொப்பி தான் முக்கியம் என அதன் பின்னாலேயே ஓடினார். ஆனால் தொப்பியின் வேகத்திற்கு முன்னால அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. கடைசியில் பவுண்டரி லைனை தாண்டிப்போய் தன்னுடைய தொப்பியை அவர் எடுத்துக்கொண்டு வர அதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.