VIDEO: அவருக்கு போய்... இப்டி ஒரு 'கெட்ட' பேரை வாங்கிக் குடுத்துட்டீங்களே?... 'சின்னப்பையனை' விளாசும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. இன்று 3-ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
முன்னதாக இந்திய அணி விளையாடியபோது போட்டியின் 59-வது ஓவரை சவுத்தி வீசினார். முதல் பந்தை லேசாக தட்டிவிட்ட ரஹானே சிங்கிள் எடுக்க எதிர்முனைக்கு ஓடினார். ரஹானே ஓடிவரும்போது பந்தை பீல்டர் அஜாஸ் பட்டேல் எடுத்து விட்டார். இதைப்பார்த்த ரிஷப் வர வேண்டாம் என கத்த, பந்தை பார்த்துக்கொண்டே ஓடிவந்ததால் ரிஷப்பின் சத்தம் அவருக்கு கேட்கவில்லை.
Poor rishabh pant. #nzvind Rishabh Pant pic.twitter.com/0VyjUuUl2g
— Shubham (@Shubham22605990) February 22, 2020
ரஹானே பாதிமுனை வரை வந்து விட்டதால் வேறு வழியின்றி பண்ட் எதிர்திசைக்கு ஓடினார். ஆனால் அதற்குள் அஜாஸ் பட்டேல் வீசிய பந்து ஸ்டெம்பை தாக்க, பண்ட் ரன்-அவுட் ஆகி 19 ரன்களில் வெளியேறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பண்டை கடுமையாக திட்ட ஆரம்பித்து இருக்கின்றனர். ஏனெனில் ரஹானே ஓடி வரும்போதே பண்டும் ஓடி இருந்தால் அவரது விக்கெட் பறிபோயிருக்காது.
அவர் பாதி தூரம் வந்த பின்னர் தான் பண்ட் ஓட ஆரம்பித்தார். இதுதான் அவரது ரன்-அவுட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுதவிர டெஸ்ட் போட்டியில் இதுவரை ரஹானே எந்தவொரு ரன் அவுட்டுக்கும் காரணமாக இருந்ததில்லை. ரன் அவுட் ஆனதும் இல்லை. பண்டின் தவறால் ரஹானே ஒரு மோசமான ரன் அவுட்டுக்கு காரணமாகி விட்டார் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.