தம்பி! இந்த புறாவுக்கே 'பெல்' அடிக்கிறவன்னுரு சொல்வாங்களே... அது நீங்கதானா?... 'வேற' லெவல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Manjula | Feb 17, 2020 11:17 PM

'மின்சார கண்ணா' படத்தில் தளபதி விஜய் ஆரம்ப காட்சியில் சைக்கிள் ஒன்றை ஓட்டிக்கொண்டு வானத்தில் பறந்து, புறாவிடம் வழிவிட சொல்லி பெல் அடித்துக்கொண்டு வருவார் ஞாபகம் இருக்கிறதா? அதேபோல இங்கு ஒரு இளைஞர் சைக்கிளை வைத்து அந்தரத்தில் பறக்கிறார்.

Young Man Cycling Video goes Viral on Social Media

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோவில் இளைஞர் ஒருவர் சைக்கிளை வைத்துக்கொண்டு தண்ணீருக்கு நடுவில் இருக்கும் கற்களுக்கு தாவுகிறார். வெற்றிகரமாக அது முடிந்தவுடன் அப்படியே சைக்கிளை திருப்பிக்கொண்டு சட்டென சைக்கிளுடன் பறந்து தரைக்கு வருகிறார்.

அதிலும் அவர் காற்றிலேயே சைக்கிளை ஓட்டுவதை பார்த்தால் வேற லெவல் நண்பா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மைக்ரோ வினாடி தவறினாலும் கீழே விழவேண்டி வரலாம். ஆனால் ஒரு இடத்தில் கூட பிசிறு தட்டாமல் தன்னுடைய விடாமுயற்சியால் தான் நினைத்ததை செய்து முடித்து அந்த இடத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் கிளம்புகிறார். அதைப்பார்த்து சக நண்பர்களும் அவருக்கு கைதட்டி வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.

வாழ்க்கையும் இதேபோல வெற்றி பெற்றவர்களைத்தான் உச்சி முகர்கிறது என்பதை மனதில் கொண்டு, நீங்களும் உங்கள் இலக்கு நோக்கி சற்றும் தளராமல் பயணப்படுங்கள்! 

Tags : #TWITTER