WATCH VIDEO: ‘நிஜ அயர்ன் மேன் இவர் தானோ’... ‘சீறிப் பாய்ந்து சாகசம் புரிந்த இளைஞர்’... 'ஜெட் பேக் இயந்திரம் மூலம் நடந்த அதிசயம்'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Feb 21, 2020 01:09 PM

அயர்ன் மேனை போன்று தரையில் இருந்து உயரே பறக்கும் தனி மனித ஜெட் விமானத்தின் சோதனை ஓட்டம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Iron Man Dreams Come True Closely After Dubai Expo

அயர் மேன் திரைப்படத்தில், டோனி ஸ்டார்க் பறந்து சென்று உதவும் காட்சிகள் அனைவர் மனதிலும் அயர்ன் மேன் போன்று பறக்கும் ஆசையை ஏற்படுத்தியிருக்கும். இந்த ஆசையை சாத்தியப்படுத்த முடியுமா என்பதை, தனி மனிதர்கள் பறக்க உதவும் ஜெட் ஆடைகளை அவ்வப்போது பல நிறுவனங்கள் சோதித்து வருகின்றன. இந்நிலையில் துபாயில் நடைபெறும் ‘துபாய் எக்ஸ்போ 2020’ -ஐ முன்னிட்டு தனி மனித விமானம் சோதனை ஓட்டம் புகழ்பெற்ற ஜுமேரா கடற்கரையில் நடந்தது. 

இதில் ஜெட் விமானங்களை தயாரிக்கும் ‘ஜெட்மேன்' எனும் நிறுவனம் தயாரித்த கார்பன் பைபர் ஜெட்சூட்டை, வின்ஸ் ரெஃபெட் (34) எனும் விமானி அணிந்துகொண்டு, முதல்முறையாக தரையில் இருந்து செங்குத்தாக மேலே பறந்தார். 8 விநாடிகளில் 100 மீட்டர், 12 விநாடிகளில் 200 மீட்டர், 19 விநாடிகளில் 500 மீட்டர், 130 விநாடிகளில் 1,000 மீட்டர் உயரத்தை அவர் எட்டினார். சுமார் 3 நிமிடங்களில் அவர் 1,800 மீட்டர் (சுமார் 6,000 அடி) உயரத்தை அடைந்தார்.

மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தார். அவர் முதுகில் அணிந்திருந்த ஜெட் இயந்திரங்கள் மூலம் மணிக்கு 400 கி.மீ. வேகத்தை கூட எட்ட முடியும். மனித விமான ஆராய்ச்சியில் மேலும் முன்னேறினால், அயர்ன் மேன் கதாபாத்திரம் விரைவில் நிஜமாகிவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags : #TWITTER #FACEBOOK #JETMAN #DUBAI #EXPO