VIDEO: ஆஜா ஜாக்கு, 'அஜக்கு' ஜாக்கு... தயவுசெஞ்சு 'சொல்லுங்க' பாஸ்... மண்டையை 'பிய்த்து' கொள்ளும் நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்சமூக வலைதளங்களின் வளர்ச்சியாலும், இணையத்தின் அதீத பயன்பாட்டாலும் எங்கோ நடக்கும் விஷயங்கள் கூட நொடிகளில் நம் கவனத்திற்கு வந்து விடுகின்றன. அதிலும் சாதாரணமாக நாம் கடந்து செல்லும் ஏதோவொரு விஷயம் சட்டென வைரலாகி, பலரை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் அதிசயம் தினசரி அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் சமூக வலைதளங்களின் தற்போதைய ஹாட் டாபிக் ஒரு பாடல் தான். ஆஜா ஜாக்கு, அஜக்கு ஜாக்கு என 3 பெண்கள் சேர்ந்து பாடும் அப்பாடல் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு அர்த்தம் சொல்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என நெட்டிசன்கள் வெளிப்படையாகவே மற்றவர்களிடம் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த பாட்டோட லிரிக்ஸ்க்கு மீனிங் சொல்றவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் டா!! 😂😂😍 pic.twitter.com/GtThKKiIFl
— ᴋᴇᴛᴛᴀᴠᴀɴ ™ (@_sarathy_) February 2, 2020
பதிலுக்கு இது வெள்ளிங்கிரி மலை பற்றிய பாடல் என்றும், நீலகிரியில் வசிக்கும் இருளர் மக்களின் பாடல் என்றும் ஏராளமானோர் பதிலளிக்க ஆரம்பித்து உள்ளனர். எனினும் உண்மையான மொழி இதுதான் என்று உறுதியாக எதுவும் தெரியவில்லை.
