"என் 'புருஷன' கலாய்க்கிறத இத்தோட 'நிறுத்திக்கோ'..." 'டென்ஷன்' ஆன ஐ.பி.எல் 'தொகுப்பாளினி'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியை ட்விட்டரில் கலாய்த்தவர்களுக்கு, அவரது மனைவியும், விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவருமான மாயந்தி லாங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மாயந்தி லாங்கர். பெண் தொகுப்பாளியான இவர், கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஸ்டூவர்ட் தற்போது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சமூகவலை தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாயந்தி லாங்கர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டியோவில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
மாயந்தி லாங்கரின் பதிவிற்கு நெட்டிசன் ஒருவர் “இப்போதெல்லாம் ஸ்டூவர்ட் பின்னி எங்கே இருக்கிறார்“ என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மற்றொருவர் “மாயந்தி லாங்கரின் பொருட்களை எடுத்து செல்ல உதவுவார்“ என்று கேலியாக பதிவிட்டிருந்தார்.
He is helping her in carrying her baggage.
— Scorpio 💯 (@Kumar_go) February 4, 2020
அவருக்கு பதிலடி கொடுத்த மாயந்தி “ என்னால் எனது சொந்த பொருட்களை எடுத்து செல்ல முடியும். அவர் தனது சொந்த வாழ்க்கையில் பிஷியாக உள்ளார். கிரிக்கெட் விளையாடி வருகிறார். எப்போதும் போல சிறப்பாக உள்ளார். அவருக்குத் தெரியாத நபர்கள் குறித்து கருத்துகளை பரிமாறமாட்டார்“ என்று தெரிவித்துள்ளார்.
