கர்ப்பிணி பெண் இணையத்தில் தேடிய தகவல்.. "அடுத்த கொஞ்ச நாளுலயே காணாம போய்ட்டாங்களா??.." திடுக்கிட வைக்கும் பின்னணி
முகப்பு > செய்திகள் > உலகம்கர்ப்பிணி பெண்ணாக இருந்த ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தற்போது இதற்கு காரணமாக இருந்தவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read | ஆத்தி.. Quarter Finals-ஏ முடிஞ்சு போச்சு.. ஆனா இப்பதான் போலி IPL -னு தெரிஞ்சிருக்கு!.. மோசடி கும்பலா..?
அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தை சேர்ந்த பியூ ரோத்வெல் என்பவருக்கும், ஜெனிபர் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் திடீரென தனது மனைவி ஜெனிபர் ரோத்வெல் காணாமல் போனதாக கணவர் பியூ ரோத்வெல் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கணவர் தான் காரணம்..
இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பியூ புகாரளித்த சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர், ஜெனிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல், அவரது உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததால், கொடூரமாக தாக்கப்பட்டு ஜெனிபர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இது பற்றி விசாரணையை போலீசார் மேற்கொண்ட போது, கணவர் பியூ தான் இதற்கு காரணம் என்பதும் உறுதி ஆனது.
முன்னதாக, மனைவி ஜெனிபர் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கும் ஒரு நாளுக்கு முன்னர், சுத்தப்படுத்தும் பொருட்களை அருகே உள்ள கடையில் இருந்து வாங்கும் காட்சிகளும் கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து, பியூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கர்ப்பிணியாக இருந்த மனைவி
இந்நிலையில், ஜெனிபர் இறந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரை கொலை செய்த வழக்கில் கணவர் பியூவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் அவர் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெனிபரை பியூ கொலை செய்யும் போது, அவர் ஆறு வார கர்ப்பிணி ஆகவும் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
தனக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்டிருந்த தொடர்பு காரணமாக மனைவி ஜெனிபருடன் ஏற்பட்டிருந்த மோதலின் பெயரில் அவரை தாக்கியதாகவும், மனைவியை திட்டம் போட்டு தாக்கவில்லை என்றும், ஆத்திரத்தில் அந்த சம்பவம் நடந்தது என்றும் பியூ தெரிவித்துள்ளார்.
இணையத்தில் தேடிய தகவல்
ஆனால், ஜெனிபர் தரப்பு வழக்கறிஞர்கள், பியூ அனைத்தையும் கவனமாக திட்டம் போட்டு செய்ததாகவும், இதற்காக தனது காதலியுடன் பேசிய மெசேஜ் விவரங்களையும் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதே போல, இறப்பதற்கு முன்னர், "நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் கணவர் வருத்தப்பட்டால் என்ன செய்வது?" என்றும் இணையத்தில் தேடி பார்த்துள்ளார் ஜெனிபர். இதன் பின்னர் தான், ஜெனிபர் மாயமானதாக பியூ புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.