'ஸ்பீட் வேற லெவெலில் இருக்கும்'...'இந்தியாவில் எப்போது '5G'?... ஏர்டெல் & ஜியோவின் பிளான் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 26, 2021 04:22 PM

ஐந்தாவது தலைமுறை (5ஜி) நெட்வொர்க் ஆனது முன்னெப்போதையும் விடவும் மிக வேகமாக இணைய இணைப்பைக் கொண்டுவரும் என்பதால், நாட்டு மக்கள் எப்போது இந்தியாவில் 5ஜி அறிமுகமாகும் என்கிற எதிர்பார்ப்பிற்கு தங்களை அறியாமலேயே தள்ளப்பட்டுள்ளனர். அதற்குள் ரிலையன்ஸ் ஜியோவும், ஏர்டெல்லும் ஆஃபர்களை அள்ளி வழங்க ஆரம்பித்துவிட்டனர்.

5g internet launch in india jio airtel vodafone bsnl plans detailed

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வி (வோடாபோன் ஐடியா) போன்ற நிறுவனங்கள் அனைத்தும் இயந்திரங்கள், பொருள்கள் மற்றும் 5 ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அனைவரையும் அனைத்தையும் இணைக்கக்கூடிய நெட்வொர்க்கை யதார்த்தமாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முந்தைய தலைமுறை மொபைல் நெட்வொர்க்குகளுடன் (4ஜி) ஒப்பிடும்போது அதிக மல்டி ஜிபிபிஎஸ் வேகம், குறைந்த தாமதம் மற்றும் அதிக நம்பகத்தன்மை ஆகியவைகள் 5ஜி-யின் "சில" நன்மைகளாகும்.

அமெரிக்கா, தென் கொரியா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே 5ஜி "தரப்படுத்தலில்" முன்னேறியுள்ளன. அந்த 5ஜி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேருமா? அது இந்த 2021 ஆம் ஆண்டிலேயே நடக்குமா?

இந்த கேள்விக்கான பதில் கொஞ்சம் தந்திரமானது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி-ஐ அறிமுகம் செய்யும் என்கிற பேச்சுக்கள் ஆங்காங்கே அடிபட்டு வரும் நிலையில், மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானது உள்நாட்டு தொலைத் தொடர்பு சந்தை 5ஜி சேவைகளுக்கு போதுமான அளவு முதிர்ச்சியடைய இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நம்புகிறது.

5ஜி ப்ரெக்வென்சி பேண்ட்ஸ் தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மார்ச் 2021-இல் 700 மெகா ஹெர்ட்ஸ் முதல் 2,500 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான ஏலங்களை நடத்துகிறது. ஆனால் இது போதுமானதாக இருக்காது என்றும், இது நாட்டில் 5 ஜி அறிமுகத்தை மோசமாக பாதிக்கும் என்று இந்திய தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 3,300-3,600 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் விற்பனையை பரிந்துரைக்கிறது, இது 5ஜி நெட்வொர்க்குகானதாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் புரட்சிக்கான முன்னோடியாக ஜியோவே நிற்கும். 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5ஜி-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டில் 5ஜி நெட்வொர்க்கில் முன்னிலை வகிக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நெட்வொர்க் உள்கட்டமைப்பு காரணமாக ஜியோ சேவைகள் 4ஜி-யிலிருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு எளிதாக மேம்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஜியோவின் 5ஜி சேவை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நெட்வொர்க், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும் என்றும் அம்பானி கூறியுள்ளார்.

மேலும், 5ஜி சேவைக்காக உலகளவில் பிரபலமாக இருக்கும் 3300-3600 மெகா ஹெர்ட்ஸ் ஏலத்தை அரசாங்கம் அறிவிக்காவிட்டால், இந்த டெலிகாம் நிறுவனம் தனது 5ஜி ஆசைகளை நிறைவேற்ற வரவிருக்கும் ஏலத்தில் 700 மெகா ஹெர்ட்ஸ் வாங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

ஏர்டெல்

இந்நிலையில், இந்தியாவில் 5ஜி-ஐஅறிமுகம் செய்யும் திட்டத்தை ஏர்டெல் இன்னும் வெளியிடவில்லை. அடுத்த தலைமுறை மொபைல் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் உருவாக்க அதிக நேரம் தேவை என்று இந்நிறுவனம் நம்புகிறது.

ஏர்டெல் தலைமை நிர்வாகியான கோபால் விட்டலின், "நாட்டில் 5ஜி சுற்றுச்சூழல் இப்போது வளர்ச்சியடையாத ஒன்றாகும் மற்றும் ஸ்பெக்ட்ரம் விலையும் உயர்ந்தது. 5ஜி உடனான அடிப்படை பிரச்சினையே ஸ்பெக்ட்ரம் செலவு தான் ஆகும்" என்று கூறியுள்ளார்.

இருப்பினும் ஏர்டெல் நிறுவனம் "5ஜி-ரெடி" என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில், 5ஜி நெட்வொர்க்குகளுக்கு முக்கிய உதவியாளராக இருக்கும் இந்தியாவின் முதல் அதிநவீன மேசிவ் மல்டிபிள்-இன்புட் மல்டிபிள்-அவுட்புட் (எம்ஐஎம்ஓ) தொழில்நுட்பத்தை கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிவித்தது ஏர்டெல் தான்.

இந்நிறுவனம், ஏற்கனவே கொல்கத்தா, பெங்களூர் மற்றும் நாட்டின் பல பிராந்தியங்கள் இந்த தொழில்நுட்பத்தை நிலைநிறுத்தியுள்ளது.

விஐ (Vodafone-Idea)

ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் கிடைத்தவுடன் வி (வோடாபோன் ஐடியா) இந்தியாவில் 5ஜி-ஐ வெளியிட உறுதியாக உள்ளது. இந்நிறுவனம் தனது 4 ஜி நெட்வொர்க்கை 5ஜி ஆர்க்கிடெக்சர் மற்றும் டைனமிக் ஸ்பெக்ட்ரம் மறுசீரமைப்பு (டிஎஸ்ஆர்) மற்றும் மிமோ (MIMO) போன்ற பிற தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தியுள்ளது.

"எங்கள் நெட்வொர்க் 5ஜி-ரெடி. 5ஜி ஏலம் நடைபெறும் போது, நாங்கள் 5ஜி-ஐ அறிமுகப்படுத்துவோம். எனினும், இந்தியா போன்ற நாடுகளில் 5ஜி சேவையை பயன்படுத்தும் "பழக்கங்களை" உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்தியா தனித்துவமான ஒரு நாடாகும். சில உலகளாவிய 5ஜி பயன்பாட்டு பழக்கங்கள் இதற்கு பொருந்தாது" என்றும் வோடபோன் ஐடியா எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் கடந்த ஆண்டு நடந்த ஏஜிஎம் கூட்டத்தில் கூறி உள்ளார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஹூவாய் மற்றும் எரிக்சன் உள்ளிட்ட பல விற்பனையாளர்களுடன் 5ஜி சோதனைகளையும் இந்த டெலிகாம் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

பிஎஸ்என்எல்

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவை சார்ந்த திட்டங்கள் தற்போது வரை ஒரு மர்மமாகவே உள்ளன. டெல்லியில் 5ஜி "சேவையுடன்" வருவதாக இந்நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிவித்தது.

ஆனால், அதற்கு பின்னர் இந்த 5ஜி விஷயத்தில் எந்த அப்டேட்டும் கிடையாது. 5ஜி மட்டங்களில் உகந்த டேட்டா வேகத்துடன் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை இந்த பிளாட்பாரம் காண்பிக்கும் என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபமா ஸ்ரீவாஸ்தவா ETT-யிடம் கூறி உள்ளார்.

அது தவிர்த்து இந்த டெலிகாம் நிறுவனம் ஒரு உள் சோதனை மையத்தையும் அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 5g internet launch in india jio airtel vodafone bsnl plans detailed | India News.