என்னணே சொல்றீங்க!?.. 'ஒரு செகண்ட்ல... 319 TB' டவுன்லோடிங் ஸ்பீடா!?.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jul 19, 2021 07:34 PM

 நொடிக்கு 319 டெராபைட் என்ற வேகத்தில் இண்டர்நெட் இயக்கப்பட்ட சம்பவம் நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

japan breaks internet speed record at 319 terabits per second

ஜப்பான் நாட்டின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இந்த மைல்கல்லை அண்மையில் எட்டியிருந்தனர். இதற்கு முன்னதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 178 டெராபைட் வேகத்தில் இன்டர்நெட்டை இயக்கியது தான் அதிவேக சாதனையாக இருந்தது.

ஒரு டெராபைட் (TB) என்பது 1000 ஜிகாபைட்டுக்கு (1000 GB) நிகராகும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில், இண்டர்நெட் இணைப்புகள் Mbps வேகத்தில் இயங்கி வருகின்றன. இந்த 319 டெராபைட் வேகத்தின் மூலம் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அந்த கண்டெண்ட் நொடி பொழுதில் டவுன்லோடாகி விடும். இதனால் தற்போது அந்த டெக்னாலஜிக்கு நெட்டிசன்கள் இடையே மவுசு உருவாகியுள்ளது.

இப்போதைக்கு தென் கொரியா, சிங்கப்பூர் மாதிரியான நாடுகள் இணைய வேகத்தில் உலக அளவில் முதல் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Japan breaks internet speed record at 319 terabits per second | World News.