சேட்டிலைட் மூலம் இணைய சேவை.. இந்தியாவையே மிரள வைக்கும் பக்கா பிளான்.. ஜியோவுடன் இணையும் புதிய நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Pandidurai T | Feb 14, 2022 04:57 PM

நாடு முழுவதும் செயற்கைக் கோள் மூலம் நேரடியாக இணையதள சேவை வழங்க உள்ளதாக ரிலையன்சின் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

jio announces plan to provide internet service via satellite

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என இந்திய சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் காலடி எடுத்து வைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட்ட ஜியோ மொபைல் சேவை தற்போது அசுர வளர்ச்சியால் 202l முதலிடத்தை பிடித்தது. ஜியோ வருகையால் ஏர்செல் நிறுவனம் வருவாய் இழந்து மூடப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல், டொகோமோ, வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தன.

போட்டியையும், வருவாய் இழப்பை தவிர்க்க டொகோமோ நிறுவனம் ஏர்டெல் உடனும் , ஐடியா நிறுவனம் வோடஃபோன் உடனும் இணைந்தது. அதிவேக இணைய சேவை, தடையில்லா மற்றும் ரோமிங் கட்டணம் இல்லா மொபைல் சேவை மக்களை ஜியோ பக்கம் வெகுவாக ஈர்க்க காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி, சாதாரணமக்களும் ஜியோ சேவையை பயன்படுத்தும் வகையில் வெறும் 1500 ரூபாய்க்கு ஜியோ போன் வழங்கி அசத்தி வருகிறது.

அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய இலக்கை நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளது. செயற்கைக் கோள் மூலம் மக்களுக்கு இணைய சேவை வழங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. லக்சம்பர்க்கை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான எஸ்.இ.எஸ் என்ற நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் ஜியோ நிறுவனம் 51 சதவீத பங்குகளையும் எஸ்.ஈ.எஸ் நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், தொலைதொடர்பு சேவைக்காக விண்வெளியில் இடைப்பட்ட பூமியின் சுற்றுவட்டப்பாதையையும், பூமிக்கு இணையான சுற்றுவட்டப் பாதையையும் பயன்படுத்தவுள்ளது. அதன்மூலம், இணையசேவை நிறுவனங்களுக்கும் மொபைல்போன்களுக்கும், இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் இணையதள நிறுவனங்களுக்கும், செல்போன்களுக்கும் தடையின்றி இணையதள சேவை வழங்கப்படும்.

இந்த இணைநிறுவனம், எஸ்.இ.எஸின் செயற்கைக்கோள் டேட்டாவை மற்றும் கனெக்டிவிட்டி சேவைகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஒரு கருவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : #JIO #NEW PLAAN #PREPAIID #INTERNET #SALELITE NET SERVICE #SES #AMBANI #RELIANCE GROUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jio announces plan to provide internet service via satellite | Business News.