மூணு பேர் 'துப்பாக்கி'யோட வீட்டுக்குள்ள வந்தாங்க... 'எல்லாரையும் கயிறு வச்சு கட்டி போட்டுட்டு'... 'எங்க கண்ணு முன்னாடியே...' - 'வார்த்தை'யால விவரிக்க முடியாத பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களால் குழந்தைகளின் முன்னால் கர்ப்பிணி பெண் ஒருவர் முகம் சிதைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளால் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் முகம் சிதைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்த பானு நெகர் என்ற பெண், மத்திய கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபிரோஸ்கோவில் உள்ள அவரது உறவினர்களின் கண்முன்னால் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. அனைவரும் வாய்மூடி இந்த குரூரத்தை கண்டது நடுங்க வைக்கும் விதமாக உள்ளது.
இந்த நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றுடன் நடந்த உரையாடலில் தாலிபான்கள், நேகரின் மரணத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹீத் இதுகுறித்து கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டோம், நான் உறுதியாக சொல்கிறேன், தாலிபான்கள் அவர்களை கொல்லவில்லை, யார் கொன்றார்கள் என விசாரணை நடத்தி வருகிறோம்.” என கூறியுள்ளார்.
முஜாஹீத் மேலும் கூறுகையில், 'தாலிபான்கள் ஏற்கனவே முந்தைய நிர்வாகத்தில் பணிபுரிந்த மக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர், மேலும் நேகரின் கொலை தனிப்பட்ட பகையில் நிகழ்ந்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (04-09-2021) தாலிபான்கள் தனது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் முன் வைத்து நேகரை அடித்து சுட்டுக் கொன்றதற்கு மூன்று ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு அறையின் மூலையில் உள்ள சுவரில் இரத்தத் துளிகள் சிதறிக் கிடப்பதைக் பார்க்க முடிகிறது, அதன் மூலம் மிகவும் குரூரமான முறையில் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து உறவினர்கள் கூறும்போது, 'மூன்று பேர் கையில் துப்பாக்கி ஏந்திக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தனர். குடும்ப உறுப்பினர்கள் எல்லாரையும் கயிறினால் கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடினர். அப்போது அவர்கள் அரபி மொழியில் பேசினர். அதற்கு பின்னர் வார்த்தையால் விவரிக்க முடியாத அந்த சம்பவம் நடந்தது' என்று தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
