"ஒரே பிரசவத்துல 4 குழந்தை'ங்க.. அதுலயும்" கர்நாடக தம்பதிக்கு நடந்த அதிர்ஷ்டம்.. ஆச்சரியத்தில் பாராட்டும் மக்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில், கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போது, பிறந்த குழந்தைகளைக் கண்டு, பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவை அடுத்த தடசா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிஸ். இவரது மனைவியின் பெயர் அல்மாஜ் பானு.
கர்ப்பமாக இருந்த அல்மாஜ் பானு, திலக் நகர் பகுதியியலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில மாதங்களாக பரிசோதனை செய்து வந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இதனிடையே, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு, சமீபத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தான் பரிசோதனை மேற்கொண்டு வந்த மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். பின்னர், அவருக்கு அங்கே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த சமயத்தில், அல்மாஜ் பானுவுக்கு திடீரென ரத்த போக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, அல்மாஜ் பானுவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது வயிற்றுக்குள் மொத்தம் 4 குழந்தைகள் இருந்துள்ளன. இதன் பின்னர், 4 குழந்தைகளையும் பத்திரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
மொத்தம் 4 பேரு..
இதனையடுத்து, தற்போது 4 குழந்தைகளும், தாய் அல்மாஜ் பானுவும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், இந்த நான்கு குழந்தைகளில், இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்துள்ளனர். அல்மாஜ் பானு - ஆரிஸ் தம்பதிக்கு டபுள் ட்வின்ஸ் பிறந்துள்ளதை பற்றி, நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து தம்பதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
