"எனக்குன்னு இருந்தது அந்த வீடு மட்டும்தான் இப்போ அதுவும்".. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது வீடு கடுமையாக சேதப்படுத்தப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read | ஆத்தி.. Quarter Finals-ஏ முடிஞ்சு போச்சு.. ஆனா இப்பதான் போலி IPL -னு தெரிஞ்சிருக்கு!.. மோசடி கும்பலா..?
22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
ஆனாலும், சிக்கல் தீர்ந்தபாடில்லை. இதனையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். இது போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ராஜினாமா
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு-வில் இருக்கும் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சில தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டனர். மிகுந்த பாதுகாப்பு கொண்ட அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் உள்ளே இருக்கும் அறைகளை ஆக்கிரமித்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த சனிக்கிழமை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-வின் வீட்டையும் போராட்டக்காரர்கள் தாக்கி முழுவதுமாக சேதப்படுத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கண்டனம்
இலங்கை பொருளாதரம் குறித்து தொலைக்காட்சியில் ரணில் பேசுகையில்,"இலங்கையின் பொருளாதார சிக்கல் தீவிரமடைந்த நேரத்தில் தான் என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இலங்கையின் பொருளாதாரம் சீராக குறைந்தது 4 ஆண்டுகளாவது ஆகும். 1-2 நாட்களில் இவை நிகழ வாய்ப்பே இல்லை" என்றார்.
மேலும், தனது வீடு போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது பற்றி பேசிய அவர்,"எனக்கென இருந்தது அந்த ஒரே வீடு மட்டும்தான். என்னுடைய நூலகத்தில் 2,500 புத்தகங்கள் இருந்தன. 200 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இருந்தன. இந்த புத்தகங்களை கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க நானும் எனது மனைவியும் தீர்மானித்திருந்தோம். வீட்டுக்கு தீ வைப்பவர்கள் ஹிட்லர் போல சிந்திக்கக்கூடியவர்கள்" என்றார்.