5 வருஷ சின்சியர் லவ்.. கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன காதலன்.. பொங்கி எழுந்த காதலி.. பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திசையன்விளை: வயிற்றில் குழந்தையுடன் காதலன் வீட்டு முன்பு தர்ணா செய்த பெண்ணுக்கு காவல்துறை அதிகாரிகள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை முருகேசபுரத்தைச் சேர்ந்தவர் 29 வயதான சசிகலா. இவரின் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், இவருக்கு 11 வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
பத்திரம் எழுதும் வேலை:
இவரின் மகள் மாமியார் குடும்பத்தோடு திருச்சியில் படித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா நெல்லையில் தனியார் அலுவலம் ஒன்றில் பத்திரம் எழுதும் வேலை பார்த்து வருகிறார். சசிகலாவும், திசையன்விளை-இட்டமொழி ரோட்டை சேர்ந்த முத்து (27) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
6 மாதம் கர்ப்பம்:
இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில் சசிகலா தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். அதோடு சசிகலா முத்து, தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக நெல்லை எஸ்பி, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையம், திசையன்விளை காவல்நிலையத்திலும் சசிகலா புகார் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசாரின் பேச்சுவார்த்தை மூலம் முத்து, சசிகலாவை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டுள்ளார். இதனால் சசிகலா சற்று நிம்மதி அடைந்தார். ஆனால், சம்மதம் தெரிவித்த சில நாட்களிலேயே மீண்டும் முத்து சசிகலாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
திருமணத்திற்கு எதிர்ப்பு:
இந்த விஷயம் குறித்து அறிந்த திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், சசிகலாவிடம் போராட்டத்தை கைவிட்டு மறுநாள் காவல்நிலையம் வருமாறு கூறினார். நேற்று காலை இருதரப்பையும் அழைத்து இன்ஸ்பெக்டர் பேசியுள்ளார். முத்துவின் வீட்டார் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிந்து வந்துள்ளனர்.
இதையடுத்து பல நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சில நிமிடங்களில் காதலன் முத்து, சசிகலாவை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். இதற்கு மேல் இப்படி விடுவது சரியில்லை என்று கையோடு காவல் நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
