'ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா'?... 'சொடக்கு போடுற நேரத்துல படம் டவுன்லோடு ஆகும்'... ஏர்டெலின் அல்டிமேட் சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது இணைய சேவையின் அடுத்த கட்டமாக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத் நகரில் வணிக ரீதியாக ஒரு குறிப்பிட்ட வலை அமைப்பில் 5G சேவையை வெற்றிகரமாக பரிசோதித்ததன் மூலம் நாட்டிலேயே முதல் நிறுவனம் என்ற பெருமையை ஏர்டெல் நிறுவனம் எட்டியுள்ளதாகவ அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இதற்காக அயராது பாடுபட்ட எங்களது பொறியாளர் குழுவுக்கு வாழ்த்துகள். டெக் சிட்டியான ஹைதராபாத்தில் இந்த சேவையை டெமோ செய்ததில் மகிழ்ச்சி.
புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் ஏர்டெல் தான் முன்னோடி என்பதையும் நிரூபித்துள்ளோம். அப்ளிகேஷன், நெட்வொர்க் மற்றும் அதற்கான சாதனங்கள் என அனைத்து சூழலும் 5G சேவைக்கு கூடி வர வேண்டியுள்ளது.
எங்கள் பங்கிற்கு இப்போது நாங்கள் தயார்" என தெரிவித்துள்ளார் பாரதி ஏர்டெலின் தலைமை செயல் அதிகாரி கோபால் மிட்டல்.
5G சேவையை பயன்படுத்தி ஒரு முழு நீள திரைப்படத்தையே ஹைதராபாத்தில் பயனர்கள் சில நொடிகளில் டவுன்லோடு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் 5G சேவை அறிமுகமாகும் என சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.