ஏற்கனவே 7.. இன்னும் ஒரு குழந்தை போதும்னு நெனெச்ச தம்பதி.. ஆனா வீடே நிறைஞ்சிடுச்சு.. 5 கோடில ஒருத்தருக்கு தான் இப்படி நடக்குமாம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்போலந்து நாட்டில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் பெண் ஒருவர். இதனால் அந்த தம்பதியர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்தவர்கள் கிளார்க் - டொமினிக்கா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ளனர். முன்னதாக இரண்டு முறை இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள இந்த தம்பதி கடந்த வருடம் முடிவு செய்து இருக்கின்றனர். அதன்படி டொமினிக்கா கர்ப்பம் அடைந்து இருக்கிறார். அதனை தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனையில் ஸ்கேன் செய்ய தனது மனைவியை அழைத்துச் சென்று இருக்கிறார் கிளார்க்.
அப்போது ஸ்கேன் செய்த டாக்டர் சற்று மிரண்டு போய்விட்டார். அதற்கு காரணம் டொமினிக்கா ஐந்து குழந்தைகளை சுமந்து வந்தது தான். இதனைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த தம்பதி அதற்காக தங்களை தயார் படுத்திக் கொண்டனர். பிரசவத்திற்கு முன்னதாகவே மனைவியை மருத்துவமனையில் சேர்த்த கிளார்க் வீட்டில் இருந்தபடி ஏழு குழந்தைகளையும் கவனித்து வந்திருக்கிறார். கடந்த ஞாயிறு அன்று சிசேரியன் முறைப்படி டொமினிக்காவிற்கு மகப்பேறு நடைபெற்று இருக்கிறது. இதில் 3 பெண் குழந்தைகளும் 2 ஆண் குழந்தைகளும் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
தற்போது தாய் மற்றும் ஐந்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஏற்கனவே இரண்டு இரட்டையர்களை பிரசவித்த டோமினிக்கா தற்போது ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். 12 குழந்தைகள் தங்கள் வீட்டில் வளர இருப்பதால் வீடே பள்ளிக்கூடம் போல மாற இருப்பதாக சந்தோஷத்துடன் தெரிவித்து இருக்கிறார் கிளார்க். இதுபோல ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுப்பது மிகவும் அரிதானது. 52 மில்லியனில் ஒருவருக்கு தான் இவ்வாறு நடக்கும் என்கிறார் கணித நிபுணரான டொமினிக்கா.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள டொமினிக்கா," நாங்கள் எட்டாவது குழந்தையுடன் நிறுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் இயற்கையின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கிறது. எங்கள் வீட்டில் தற்போது கூட்டம் கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. நான் கணிதத்தில் ஈடுபாடு கொண்டவள். 52 மில்லியனில் ஒருவருக்குத்தான் இதுபோன்று நடக்கும்" என சந்தோஷத்துடன் தெரிவித்து இருக்கிறார்.