"ஏதோ உலகத்துக்கு என்னால முடிஞ்ச உதவி".. இரட்டை குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க் போட்ட வைரல் ட்வீட்....!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் போட்டுள்ள ட்வீட் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

Also Read | இந்தியாவுலயே இப்படி ஒரு கோவிலை யாரும் கட்டுனதில்ல.. நாட்டையே திரும்பிப் பார்க்க வச்ச ஓய்வுபெற்ற ஆசிரியர்..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்க முன்வந்தார் மஸ்க்.
இரட்டை குழந்தைகள்
இந்நிலையில், இலான் மஸ்க்கிற்கும் அவரது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஆவணங்களை இந்த தம்பதி, சமர்ப்பிக்கப்போய் இந்த விபரம் வெளியே வந்திருப்பதாக தெரிகிறது.
இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. எலாஸ் மஸ்க் தனது முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவின் பாடகர் கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.
ட்வீட்
எலான் மஸ்க்கிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்," மக்கள்தொகை நெருக்கடிக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். சரிந்து வரும் பிறப்பு விகிதம் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து" எனக் குறிப்பிட்டுளார்.
தொடர்ந்து உலகில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையும், அதனை தடுக்கவேண்டும் என எலான் மஸ்க் வலியுறுத்திவந்த நிலையில் அவரது இந்த ட்வீட், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | 23 வருஷத்துக்கு அப்பறம் இப்படி நடந்திருக்கு.. அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

மற்ற செய்திகள்
