மொத்தமா 15 மனைவிகள்.. 107 குழந்தைங்க.. "இத்தனை கல்யாணம் பண்ணது ஏன்? அதிரவைத்த காரணம்..
முகப்பு > செய்திகள் > உலகம்15 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு நபர் ஒருவர் வாழ்ந்து வரும் நிலையில், இதற்கான காரணம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருபவர் David Sakayo Kaluhana. 61 வயதாகும் டேவிட்டிற்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர்.
அது மட்டுமில்லாமல், இந்த 15 மனைவிகளுடனும் ஒன்றாக இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக தான் டேவிட் வாழ்ந்து வருகிறார்.
அதே போல, டேவிட் மற்றும் அவரது மனைவிகளுக்கு மொத்தம் 107 குழந்தைகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் ஒரே மனைவியுடன் 15 குழந்தைகளை டேவிட் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தனை மனைவிகளை திருமணம் செய்வதற்கு இன்ஸ்பிரேஷன் யார் என்பது பற்றி பேசிய டேவிட், அரசர் சாலமன் என கூறி உள்ளார்.
முன்பொரு காலத்தில், அரசராக இருந்த சாலமன் 700 மனைவிகளை கொண்டு வாழ்ந்து வந்ததாக டேவிட் கூறி உள்ளார். மேலும், சாலமனை விட தான் எந்த விதத்திலும் குறைந்த ஆளில்லை என கருதுவதாகவும், அதனால் தான் அதிக பெண்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி மேலும் பேசும் டேவிட், "என்னுடைய தலைக்குள் இருக்கும் சுமையை ஒரு பெண்ணால் நிர்வகிக்க முடியாது. ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அதிக அறிவுத் திறன் எனக்கு இருப்பதால் தான் இத்தனை பெண்களை நான் திருமணம் செய்து கொண்டுள்ளேன்" என டேவிட் கூறி உள்ளார். வரலாற்று பேராசிரியரான டேவிட், நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்துள்ளதாகவும், அவருடைய பழங்குடியின மக்களில் இது போன்ற ஒரு மனிதர், பல தலைமுறைக்கு ஒருவர் தான் வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே போல, டேவிட்டின் மனைவிகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பொறாமை இல்லாமல், மிகவும் அன்பு காட்டி வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இன்னும் புதிதாக மனைவிகளை டேவிட் சேர்த்துக் கொண்டால் கூட மற்ற மனைவிகளுக்கு பிரச்சனை இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அனைவரும் ஒரே இடத்தில் வசித்து வருவதால், அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவுகள் நிறைய தயார் செய்ய வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
டேவிட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
