INDVAUS: படுத்தேவிட்டாரய்யா.. டெல்லி PITCH-யை அணுஅணுவாய் ஆராயும் ஸ்மித்..! "செம்ம வேட்டை இருக்கு போல'.. குஷியான ஜடேஜா?"..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் பார்வையும் தற்போது டெல்லி டெஸ்ட் நோக்கி திரும்பியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | தளபதி விஜய் பாணியில் சூப்பரா சொன்ன பிரபல கிரிக்கெட் வீரர்..! தீயாய் பரவும் ட்வீட்...
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது.
அந்த வகையில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Images are subject to © copyright to their respective owners.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 91 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என முன்கூட்டியே பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை வெள்ளிக்கிழமை துவங்க இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த போட்டிக்கான பிட்ச்சின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வலைப்பயிறசிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ், வார்னர், ஸ்மித் ஆகியோர் ஆடுகளத்தை ஆராய்ந்தனர். ஸ்மித் ஒரு படி கீழே சென்று பிட்சில் படுத்து உற்று நோக்கி ஆராய்ந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. நாக்பூர் ஆடுகளம் போல இந்த ஆடுகளமும் காய்ந்த நிலையில் காட்சியளிக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, புஜாரா ஆகியோர் பிட்சை ஆராய்ந்தனர். அப்போது ஜடேஜா & சூர்யகுமார் யாதவ் சிரித்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிட்ச் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால் ஜடேஜா மகிழ்ச்சியாக உள்ளார் என சமூக வலைத்தளங்களில் மீம்கள் பரவி வருகின்றன.