புதுசா கல்யாணம் பண்ணா ‘67 லட்சம்’ ரூபாய் கடன்.. ஒரு குழந்தை பெற்றால் ‘வட்டி’ தள்ளுபடி.. 3 குழந்தை பெற்றால் மொத்த கடனும் ‘தள்ளுபடி’.. அதிரடி சலுகையை அறிவித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்தம்பதியினர் 3 குழந்தைகள் பெற்றால் சுமார் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தென்கொரியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா South Gyeongsang மாகாணத்தில் உள்ள Changwon நகரில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி 3 குழந்தைகள் பெறும் தம்பதிக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.73,33,025) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக திருமணம் செய்துகொள்ளும் தம்பதிக்கு 92 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.67,48,094) கடனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெறும் தம்பதி முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும், 2-வது குழந்தை பெறும்போது கடன் தொகையில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 3-வது குழந்தை பெற்றால் முழு தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
