VIDEO: யாருய்யா அது? பறந்து வந்து மைதானத்தில் விழுந்த நபர்.. தெறித்து ஓடிய வீரர்கள்.. நடுவர் செஞ்ச ‘அல்டிமேட்’ சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாராசூட்டுடன் நபர் ஒருவர் கால்பந்து மைதானத்தில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலந்து நாட்டில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து லீக் போட்டி நடைபெற்றது. போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென மைதானத்தில் பாராசூட்டுடன் ஒருவர் குதித்தார். இதனால் வீரர்கள் திகைத்துப்போய் நின்றனர்.
இதனை அடுத்து போட்டி நடுவரும், கால்பந்து வீரர்களும் அவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது பாராகிளைடிங் பயிற்சி மேற்கொண்டபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அதனால் கால்பந்து மைதானத்தில் அவசரமாக தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே நகைச்சுவையாக போட்டி நடுவர் பாராகிளைடிங் வீரரை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு மஞ்சள் அட்டையைக் காண்பித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
