‘பெட்ரோல், டீசல் வாங்க இனி பங்க் போகத் தேவையில்லை..’ ஆச்சரியப்படுத்தும் அரசின் புதிய திட்டம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 18, 2019 05:22 PM

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இனிமேல் சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே விற்பனை செய்யும் திட்டத்தில் அரசு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Government plans to sell petrol diesel in supermarkets

மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை எளிதில் கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, ஆங்காங்கே சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே இனிமேல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது பற்றி ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  அமைச்சரவையில் முன்மொழியவுள்ள இந்தத் திட்டத்தால் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பியூச்சர் குரூப், ரிலையன்ஸ், சவுதி அராம்கோ ஆகிய நிறுவனங்கள் இதில் களமிறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags : #PETROL #DIESEL