ஓவர் ஸீன்.. 'மொக்கை' டீமுக்கு எதிரா அடிச்சதுக்கே இப்டியா?.. 'சாபம்' கொடுக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 18, 2019 07:45 PM
இளம்வீரர் பிரித்வி ஷா சமீபத்தில் அசாம் அணிக்கு எதிராக 63 ரன்கள் எடுத்தார். தடையில் இருந்து மீண்டு வந்த பின் ப்ரித்வி ஷா, சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணி சார்பாக பங்கேற்றார். அப்போது 39 பந்தில் 63 ரன்கள் எடுத்தார்.

அரை சதம் அடித்தபின் இந்திய கேப்டன் விராட் கோலி போல பேட்டை உயர்த்தி சைகை காட்டினார். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டது. இதைப்பார்த்த ரசிகர்கள் அசாம் போன்ற ஒரு வலுவில்லாத அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததுக்கே இவ்வளவு ஆட்டமா? என விமர்சனம் செய்து வருகின்றனர்.
Welcome back! He is making a comeback today and @PrithviShaw makes it a memorable one with a fine-half century for Mumbai against Assam in @Paytm #MushtaqAliT20. pic.twitter.com/hiBfiElhed
— BCCI Domestic (@BCCIdomestic) November 17, 2019
அதிலும் ஒரு ரசிகர் இவர் நீண்ட நாட்கள் கிரிக்கெட் உலகில் நிலைக்க மாட்டார் என விமர்சனம் செய்துள்ளார். மேலும் இவருக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்படுவதாகவும் ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர். அதோடு இளம் வீரர்கள் இதுபோன்ற செயல்களை அடிக்கடி செய்வதாகவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
