சுமை தூக்கும் தொழிலாளியின் மகள்... இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டன்!.. தமிழகத்தின் சிங்கப்பெண் கனவுகளை எட்டிப்பிடித்தது எப்படி?.. புல்லரிக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை இந்தியாவில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் துருக்கி சென்ற இந்திய பெண்கள் அணி, செர்பியா, ரஷ்யா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணி, ஏப்ரல் 5 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியுடனும், ஏப்ரல் 8 ஆம் தேதி, பெலாரஸ் அணியுடனும் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கிறது. இந்த இரு ஆட்டங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீராங்கனை இந்துமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக இந்துமதி விளையாடி வருகிறார். இதுவரை 34 போட்டியில், 12 கோல் அடித்துள்ளார். அவர் தற்போது தமிழக காவல் துறையில் 'சப்-இன்ஸ்பெக்டராக' பணியாற்றி வருகிறார்.
இது குறித்து இந்துமதி கதிரேசன் கூறுகையில், "துருக்கியில் நாங்கள் மிகச்சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடினோம். அந்த அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறோம். துருக்கியில் நடந்த ஆட்டங்களுக்கு சங்கீதா பஸ்தோர் கேப்டனாக இருந்தார். இந்த இரண்டு போட்டிகளுக்கு நான் கேப்டனாக இருக்கப் போகிறேன். இது பெருமைமிக்க தருணமாக உணர்கிறேன்" என்றார்.
கடலூரிலுள்ள மஞ்சகுப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி கதிரேசன் என்பவரின் மகள்தான் இந்துமதி என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
