‘57 வயதில் காதல் கல்யாணம்’.. மணமேடையிலேயே அடிச்ச ‘அதிர்ஷ்ட’ காத்து.. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த மாப்பிள்ளை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கால்பந்து போட்டிக்கு வாங்கிய பரிசு கூப்பனால் திருமண நாளன்று மணமகனுக்கு அதிர்ஷ்டம் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் விட்னெஸ் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட் புர்செல். 57 வயதான சமீபத்தில் தனது காதலி விக்டோரியாவை திருமணம் முடித்தார். திருமண நாளன்று மணமேடையிலே அந்த அதிர்ஷ்டம் ரிச்சர்ட் புர்செலினுக்கு அடித்துள்ளது.
திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கால்பந்து போட்டிக்காக பரிசு கூப்பன் ஒன்றை ரிச்சர்ட் புர்செல் வாங்கியுள்ளார். மணமேடையில் நின்று கொண்டு இருக்கும்போது எதர்ச்சையாக அந்த கூப்பன் குறித்து ரிச்சர்ட்டுக்கு ஞாபகம் வந்துள்ளது. உடனே மணமகன் அறைக்குச் சென்று கூப்பனுக்கான ரிசல்ட்டை பார்த்துள்ளார்.
அதில் அவருக்கு 10,000 டாலர் (ரூ.9.89 லட்சம்) பரிசு விழுந்திருப்பதைக் கண்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது காதல் மனைவி விக்டோரியா மற்றும் திருமணத்துக்கு வந்திருந்த நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அனைவரும் திருமணத்துக்கும், பரிசு விழுந்ததற்கும் சேர்த்து வாழ்த்து தெரிவித்து சென்றுள்ளனர்.

மற்ற செய்திகள்
