'ஒரு காலத்தில ராஜா மாதிரி வாழ்ந்த மனுஷன்!.. நாடே 'தலை'ல தூக்கி வச்சு கொண்டாடுச்சு!'.. 'இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?'.. கலங்கவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு'நாம் ஏழையாகப் பிறப்பதில் தவறில்லை, ஏழையாகவே மறைவது தான் தவறு' என்ற பொன்மொழி உண்டு. ஆனால், வாழ்வின் அசாதாரணமான சம்பவங்களை வெற்றி கொண்டவர்கள், புகழின் உச்சியில் இருந்து சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்கு வீழ்வது, கொடுமையிலும் கொடுமை. அத்தகைய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
![olympic champion ruben limardo turns delivery rider for livelihood olympic champion ruben limardo turns delivery rider for livelihood](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/olympic-champion-ruben-limardo-turns-delivery-rider-for-livelihood.jpg)
கொரோனா பெருந்தொற்று பல லட்சம் உயிர்களை கொலையுண்டது மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அடித்து நொறுக்கி உள்ளது. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், லாக்டவுனுக்கு முன்பு நல்ல நிலையில் இருந்தவர்களும் அதற்கு விதி விலக்கில்லை என்பது தான்.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற வெனிசுலாவைச் சேர்ந்த வாள்சண்டை வீரர், தனது வாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர் ரூபன் லிமார்டோ. லத்தீன் அமெரிக்க பகுதியில் இருந்து வந்து, வாள்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
கொரோனா பேரிடரால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இவர், தனது அன்றாட தேவைகளுக்காக போலந்து நாட்டில் உள்ள லோட்ஸ் நகரில், உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக, நாள் ஒன்றுக்கு சுமார் 50 கி.மீ. அலைந்து திரிந்து, வார இறுதியில் 100 யூரோக்கள் வரை சம்பாதிக்கிறார்.
எனினும், மனம் தளராது உழைக்கும் ரூபன், தன்னுடைய கனவுகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவே கூறுகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஒவ்வொரு முறை நான் உணவு டெலிவரி செய்யும் போதும், 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில், எனக்கு பதக்கம் கிடைக்க இந்த உழைப்பு உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்" என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
விடாமுயற்சியுடன் போராடி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்கள் இது போன்ற ஆதரவற்ற நிலையில் சிரமப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)