“உங்களுக்காகவே எல்லா மேட்சும் பாத்தேன்!”.. “என் ஹீரோ மறைஞ்சுட்டார்!” - இந்திய கிரிக்கெட் பிரபலம் உருக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅர்ஜென்டினா கால்பந்து அணி முன்னாள் கேப்டன் மரடோனா தனது 60வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
1986ம் ஆண்டு உலக கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி கேப்டனாக இருந்த மரடோனா, பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக உலக கால்பந்து அரங்கில் பார்க்கப்பட்டவர். அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்று, 91 சர்வதேச போட்டிகளில் ஆடி 34 கோல்கள் அடித்துள்ளார்.
இவரது மறைவுபற்றி பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி, “என் ஹீரோ மறைந்தார். நான் கால்பந்து போட்டிகளை உங்களுக்காகவே பார்த்தேன். நான் தீவிர பைத்தியமாக இருந்த ஒரு மேதை இப்போது ஆழ்ந்த அமைதியாகிவிட்டார்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிரேசில் கால்பந்து வீரர் பீலே வெளியிட்ட செய்தியில், “மரடோனா சிறந்த நண்பர். அவர் போன்ற ஒரு கால்பந்து மேதையை உலகம் இழந்தது. வானில் நாங்கள் ஒருநாள் ஒன்றாக கால்பந்து விளையாடுவோம்” என தெரிவித்தார். மரடோனா மறைவுக்கு லயோனல் மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்ட கால்பந்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.