VIDEO: இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட... உலகின் மிகப்பெரிய வெடிகுண்டு... செயல் இழக்கச் செய்தபோது நடந்த 'விபரீதம்'... வெளியான 'பகீர்' காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தபோது நீருக்கு அடியில் வெடித்துச் சிதறியது.

உலக நாடுகளுக்கு இடையே கடந்த 1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப் போர் மூண்டது.
இந்தப் போரின் போது தான், மனித வரலாற்றில் முதன் முறையாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் இன்று வரை குறையாமல் இருப்பதோடு, மீண்டும் ஒரு அணு ஆயுதம் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் உலக நாடுகள் கவனமாக இருந்து வருகின்றன.
இதற்கிடையில், இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பல்வேறு இடங்களில் அவ்வபோது கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றில் பல குண்டுகள் செயலிழந்த நிலையில் இருந்தாலும், சில குண்டுகள் இன்றும் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது கடந்த 1945 ஆம் ஆண்டு பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டு என்றும், அதன் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் எதிர்பாரதாக விதமாக நீருக்கடியில் வெடித்துச் சிதறியது.
இதனால், தண்ணீர் மேல நீண்ட உயரத்திற்கு எழுந்தது. எனினும், நீருக்கடியில் வெடித்ததில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை எனக் கூறியிருக்கும் அந்நாட்டு அதிகாரிகள், தற்போது ஆபத்து நீங்கியதாக தெரிவித்துள்ளனர்.
வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்
