'எல்லாம் நல்லா தானே போகுதுன்னு நெனச்சோம்'... 'இடியாய் வந்த செய்தி'... 3 மாதத்திற்கு பிறகு தவித்து நிற்கும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
இந்தோனேசியாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும்.
இந்தோனேசியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.