கால்பந்து உலகின் 'ஜாம்பவான்' மரணம்... மீளாத்துயரில் 'கால்பந்து' ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என அழைக்கப்படும் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த டீகோ மரடோனா (Diego Maradona), மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவர் மரணமடைந்த செய்தி, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 60 வயதான மரடோனா, கடந்த நவம்பர் 11 ஆம் தேதியன்று மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, மது பழக்கத்திற்கு மரடோனா அடிமையாக இருந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து, அறுவை சிகிச்சை முடிந்து கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருந்து வந்த மரடோனா, இன்று மாரடைப்பின் காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது. இந்த தகவலை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் மரடோனா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது ரசிகர்கள் கலங்கிப் போயிருந்த நிலையில், தற்போது அவரது மரணம் தொடர்பான செய்தி ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
