'வாசற்படியில இருந்த சாக்லெட், கடிதம்...' 'ரொம்ப நாளா தவிச்சிட்டு இருந்தோம்...' 'நீங்க மட்டும் 'அத' பண்ணலன்னா... - அதான் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கோம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் சுட்டித்தானமான குழந்தைகளின் செயல் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் வசிக்கும் மெண்டல் ஹெல்த் பார்மசிஸ்ட் இறுதியாண்டு மாணவியான டோலி சூட் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்ட பதிவு தற்போது உலகெங்கும் பரவி வைரலாகி வருகிறது.
அதில், தன்னுடைய வீட்டின் வாசலில் இரண்டு சாக்லேட் துண்டுகளும், ஒரு கடிதமும் இருந்தது என கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'எங்களுடைய கால்பந்து பந்தை கடந்த வாரம் தேடி கொடுத்ததற்கு நன்றி. இந்த பந்து எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ரொம்ப நாளாகவே அதைக் காணமல் தவித்துக் கொண்டிருந்தோம். இதைமட்டும் நீங்கள் கண்டுபிடித்து கொடுக்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்திருக்கும்' கண்டுபிடித்துக் கொடுத்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றி, இந்த கடிதத்தை எழுதும் எங்களுக்கு வெறும் ஆறு, எட்டு மற்றும் ஐந்து வயதே ஆகிறது.
இந்த பதிவு சுமார் 72,000க்கும் மேல் லைக் செய்யப்பட்டும் 5000க்கும் மேல் ரீட்வீட் செய்யப்பட்டும் உள்ளது.
மகிழ்ச்சி என்பது ஆடம்பர வாழ்க்கையிலோ, பணத்திலோ அல்லது ஆபாரணங்களில் இல்லை குழந்தைகள் தரும் அன்பில் உள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.
— DollSud (@dolly_sud) March 28, 2021