"இதையும் பச்சைக் குத்தலாமா?".. இளம் தம்பதியின் வைரல் டாட்டூ.. பின்னணி தெரிஞ்சு லைக்குகளை அள்ளி வீசும் நெட்டிசன்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக நாம் இணையதளத்தில் அதிக நேரம் வலம் வரும் போது நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான வைரலான சம்பவங்களை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Also Read | இந்தியாவில் உதயமான புது Bus Stand.. இங்கிருந்து போக மனசே வராது போலயே! எங்க இருக்கு?
அதே வேளையில் காதல் குறித்தும் ஏராளமான நிகழ்வுகள் பெரிய அளவில் இணையத்தில் பேசு பொருளாவது குறித்தும் நாம் நிறைய கவனித்து இருப்போம்.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் கையில் டாட்டூ குத்திக் கொண்டுள்ள சூழலில் அதன் பின்னால் உள்ள காரணம் தான் பலரையும் மனம் கவர்ந்து வருகிறது.
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியர் அஃபான் மற்றும் சைரட் ஆகியோர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆவதாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி இருக்கையில் அஃப்பான் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் இருவரது கைகளிலும் டாட்டூ குத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஏதோ வாசகம் இடம்பெற்றுள்ள சூழலில், அதன் காரணம் என்ன என்பது பற்றியும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அஃபான் மற்றும் சைரட் ஆகியோர் நண்பர்களாக பழகத் துவங்கிய சமயத்தில், அவர்கள் காதல் மலர்ந்த போது இருவரும் பரிமாறிக் கொண்ட வாட்ஸ் அப் மெசேஜின் ஸ்க்ரீன் ஷாட்கள் இடம் பெற்றுள்ளன. அப்படி இருக்கையில், அதில் உள்ள முக்கியமான குறுந்தகவல்களின் வாசகங்களை தான் தங்கள் கைகளில் அவர்கள் பச்சைக் குத்தி அதன் புகைப்படங்களையும் அந்த பதிவில் இணைத்துள்ளனர்.
பலரும் பல விதமான விஷயங்களை தங்கள் உடலில் பச்சை குத்திக் கொள்ளும் சூழலில், Whatsapp -ல் தங்கள் பரிமாறிக் கொண்ட மெசேஜை இளம் தம்பதியர் பச்சைக் குத்தியுள்ள சம்பவம் தற்போது பலரது லைக்குகளையும் அள்ளி வருகிறது.
சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு நபர் ஒருவர் தனது திருமணச் சான்றிதழை கையில் பச்சை குத்தி தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்த செய்தியும் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
