26 கல்யாணம்.. 22 பேருடன் விவாகரத்து.. ஆனாலும் 60 வயது நபரின் தீராத விருப்பம்..
முகப்பு > செய்திகள் > உலகம்சமூக வலைத்தளங்களை நாம் நாள்தோறும் திறந்து கொஞ்ச நேரம் அதில் உலவிடும் போதே நம்மை சுற்றி நடைபெறும் பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Images are subject to © copyright to their respective owners.
அதிலும், இயல்பாக நிகழும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடக்கும் விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகள் கூட இணையவாசிகள் மத்தியில் வைரல் ஆவதை நாம் கவனித்திருபோம்.
இந்த நிலையில், தற்போது அப்படி இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் செய்தி ஒன்றின் பின்னணி தான் பலர் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 வயது நபர், தன்னுடைய திருமண விருப்பங்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இவர் ஏற்கனவே 26 முறை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அதில் 22 பெண்களை அவர் விவாகரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீதம் நான்கு மனைவிகளுடன் அவர் வாழ்ந்து வரும் சூழலில் அவர்கள் அனைவருமே 25 வயதுக்குள் இருக்கும் பெண்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் 100 பெண்களை திருமணம் செய்வதுதான் தன்னுடைய விருப்பமாக அந்த நபர் குறிப்பிடும் சூழலில், குழந்தைக்காக தான் அவர் திருமணம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல குழந்தை பெற்ற பின்பு அவர்களை விவாகரத்து செய்வதாகவும் அந்த நபர் அந்த வீடியோவில் பேசுவதாக தகவல்கள் குறிப்பிடும் நிலையில், இந்த சம்பவம் அதிகம் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தை பெற்ற பிறகு அவர் விவாகரத்து செய்து கொள்வார் என குறிப்பிடும் சூழலிலும் பல பெண்கள் அவரை திருமணம் செய்து கொண்டு வருவது பற்றி இணையவாசிகள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், தனது வாழ்நாளில் 100 திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் குறிப்பிட்டுள்ளது பற்றிய கருத்துக்களையும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "ஒரு அம்மாவுக்கு இதைவிட என்ன வேணும்?".. தமிழக கால்பந்தாட்ட வீராங்கனையின் உருக்கமான பதிவு!!..

மற்ற செய்திகள்
