தமிழ் சகோதரர்களுக்கு.. கனடாவில் அடித்த தாறுமாறு அதிர்ஷ்டம்.. விஷயம் தெரிஞ்சதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சாம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Mar 02, 2023 12:45 PM

பொதுவாக ஒருவரது வாழ்கைக்யில் எந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. வாழ்க்கையில் நிறைய கடினமான சூழல்கள் வந்து கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென ஒரே நாளில் வாழ்க்கையை திருப்பி போடுவது போல ஏதாவது அதிசயங்கள் நிகழும்.

Canada 3 siblings won big amount in lottery jackpot

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "கிரிக்கெட்டோட தீர்க்கதரிசிங்க இவரு? 😅".. தினேஷ் கார்த்திக் சொன்ன அடுத்த பந்தில் நடந்த அற்புதம்.. வைரல் வீடியோ!!

அதிலும் லாட்டரி டிக்கெட் வாங்கும் போது ஏராளமானோரின் வாழ்க்கையே தலைகீழாக மாறுவது குறித்து நிறைய நிஜ சம்பவங்கள் நிகழ்வதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையிலான ஒரு செய்தி தான் தற்போது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு நிகழ்ந்துள்ளது.

கனடா நாட்டின் ஒன்றாரியோ பகுதியில் சமீபத்தில் நடத்த லாட்டரி டிக்கெட் முடிவில் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை (இந்திய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய்) இரண்டு தமிழ் சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் வென்றுள்ளனர்.

யோகராஜா பொன்னுதுரை, தவராஜா மற்றும் அருள்வதனி ஆகிய சகோதர சகோதரிகள் தான் இந்த ஐந்து மில்லியன் டாலர் பரிசை வென்றுள்ளனர். தான் பரிசு வென்றது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தவராஜா குறிப்பிட்டுள்ளார். அதே போல இது பற்றி அவருடைய சகோதரியிடம் தெரிவித்த போதும் அவர் முதலில் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Canada 3 siblings won big amount in lottery jackpot

Images are subject to © copyright to their respective owners.

மேலும் தவராஜா தன்னுடைய சகோதரர் யோகராஜாவிடம் இந்த பரிசு குறித்து அறிவித்த போது அவர் அழுது அதிர்ச்சியில் கீழே விழுந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. கனடாவில் தமிழ் சகோதரர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம் தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரல் ஆகி வருகிறது. மேலும் தாங்கள் வென்றுள்ள பரிசு தொகையை வைத்து கார் ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளதாகவும், தங்களின் குழந்தைகளின் கல்விக்காக ஒதுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பணத்தை கொண்டு வீடு கட்டவும் அவர்கள் திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக லாட்டரியை அவர்கள் வாங்கி வரும் சூழலில், தற்போது மூன்று பேருக்கும் கூட்டாக நடந்துள்ள அதிர்ஷ்டத்தை அவர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Also Read | இந்தியாவில் உதயமான புது Bus Stand.. இங்கிருந்து போக மனசே வராது போலயே! எங்க இருக்கு?

Tags : #CANADA #SIBLINGS #LOTTERY #JACKPOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Canada 3 siblings won big amount in lottery jackpot | World News.