யப்பா நம்ம உமேஷ் யாதவா இது?.. அடுத்தடுத்து பறந்த சிக்ஸர்கள்.. விராட் கோலி ரியாக்ஷனை பாருங்க 😅.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 02, 2023 10:00 AM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் உமேஷ் யாதவ் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசியது சக அணி வீரர்களுக்கே சர்ப்ரைஸ்-ஆக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது. 

Virat Kohli reaction on Umesh Yadav two consecutive sixes

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | கின்னஸ் சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்.. உலகையே திரும்பி பாக்க வெச்ச சம்பவம்.. வைரல் வீடியோ!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள சூழலில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. தொடர்ந்து ஆடி இருந்த ஆஸ்திரேலியா அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் 4 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றி உள்ளார்.

Virat Kohli reaction on Umesh Yadav two consecutive sixes

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து, தற்போது இரண்டாவது நாள் ஆட்டமும் ஆரம்பமாகி உள்ளது. முன்னதாக, இந்த போட்டியில் இந்திய அணி 100 ரன்களை கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. 88 ரங்களுக்கு 8 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தவித்தது. அப்போது ஆட வந்த உமேஷ் யாதவ், 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி என வேகமாக ரன் சேர்க்க இந்திய அணி 100 ரன்களையும் கடந்திருந்தது.

Virat Kohli reaction on Umesh Yadav two consecutive sixes

Images are subject to © copyright to their respective owners.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, பவுலரான உமேஷ் யாதவ் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசியது ரசிகர்கள் மட்டும் அல்லாது, இந்திய அணி வீரர்களையும் ஆச்சர்யம் கொள்ள செய்தது. 30வது ஓவரை நாதன் லியன் வீச ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸரை பறக்கவிட்டார் உமேஷ். அதேபோல, மர்பிக்கும் சிக்ஸரால் பதில் கொடுத்தார். அப்போது, விராட் கோலி உற்சாக மிகுதியால் நடனமாடியபடி அந்த தருணத்தை கொண்டாடினார். இந்த ரியாக்ஷன் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

Also Read | "Fake Account-ல இருந்து அவசரம்னு பணம் கேட்டு மெசேஜ்".. பிரபல இயக்குநர் நடிகர் ரவி பரபரப்பு புகார்..!

Tags : #CRICKET #VIRAT KOHLI #UMESH YADAV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat Kohli reaction on Umesh Yadav two consecutive sixes | Sports News.