ஒரே நாளில் 3 நிறங்களுக்கு மாறும் சிவலிங்கம்?.. பல்லாண்டு பழமையான கோவிலில் தினந்தோறும் நடக்கும் அதிசயம்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிவலிங்கம் ஒன்று தினசரி மூன்று முறை வெவ்வேறு நிறங்களில் காட்சியளிப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே பல பக்தர்கள் இந்த கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | யப்பா நம்ம உமேஷ் யாதவா இது?.. அடுத்தடுத்து பறந்த சிக்ஸர்கள்.. விராட் கோலி ரியாக்ஷனை பாருங்க 😅.. வீடியோ..!
இந்தியா முழுவதும் ஏராளமான சிவ ஸ்தலங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட சிறப்புகளும் அமைந்திருக்கின்றன. காசி, அமர்நாத், திருவண்ணாமலை என பல்வேறு சிவ ஆலயங்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ராஜஸ்தானில் உள்ள சிவன் கோவில் ஒன்று வித்தியாசமான தனிச்சிறப்பை தன்னிடத்தில் கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் பகுதியில் அமைந்துள்ளது அட்சலேஸ்வரர் மகாதேவர் ஆலயம். இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு ஒரு சிவலிங்கமும் அதன் மீது செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலையும் அமைந்துள்ளது. லிங்கத்திற்கு குடையாக நாகர் அமைந்திருக்க ஏராளமானோர் இந்த கோவிலில் தினம் தோறும் வழிபட்டு வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கம் ஒரு நாளில் மூன்று முறை நிறம் மாறும் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கம் நண்பகலில் காவி நிறத்திலும் இரவில் இதன் நிறம் கருமையாகவும் மாறிவிடுவதாக சொல்லப்படுகிறது. மறுநாள் காலை மீண்டும் சிவப்பு நிறத்தில் இந்த சிவலிங்கம் காட்சியளிக்கிறது. அட்சலேஸ்வரர் மகாதேவர் ஆலயம் கட்டப்பட்ட காலத்திலேயே இந்த சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதாக பலர் கருதுகின்றனர்.
இந்த சிவலிங்கத்தின் மீது படும் சூரிய ஒளி காரணமாக இந்த நிறமாற்றம் ஏற்படலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதே வேளையில் திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அதன்படி திருமணத்திற்காக காத்திருக்கும் வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த கோவிலுக்கு செல்வதை வாடிக்கையாகவும் கொண்டிருக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் இந்த சிவன் கோவில் குறித்த செய்திகள் அவ்வப்போது வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது மீண்டும் இந்த சிவலிங்கம் பற்றிய செய்திகள் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | இந்தியாவில் உதயமான புது Bus Stand.. இங்கிருந்து போக மனசே வராது போலயே! எங்க இருக்கு?