அதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடு.. அஸ்வின் சொல்லும் புதுக்கணக்கு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Feb 07, 2023 06:27 PM

இந்த ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் ஆசியக் கோப்பையை எங்கு நடத்துவது என்பது பற்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

R Ashwin about Pakistan deny to play in india for World Cup

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | கணவரைப் பற்றி மலாலா செய்த ட்வீட்.. Poll வச்சு கருத்து கேட்ட கணவர்😅.. வைரல் போஸ்ட்..!

முன்னதாக நடப்பு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒருவேளை பாகிஸ்தானில் போட்டி நடைபெற்றால் இந்தியா அந்தத் தொடரில் பங்கேற்காது என ஜெய்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்வினையாக ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்தியா, பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

R Ashwin about Pakistan deny to play in india for World Cup

Images are subject to © copyright to their respective owners.

இந்த கருத்து வேறுபாடு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இது குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், "இதுபோன்று பலமுறை நடைபெற்றிருக்கிறது. நாம் அவர்களுடைய இடத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்தால் அவர்கள் நம்முடைய இடத்திற்கு வர மறுப்பார்கள். அதேபோல, இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான அணி பங்கேற்காது என தெரிவித்திருக்கிறது. ஆனால் அது நடைபெற சாத்தியமானது இல்லை என்றே நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

R Ashwin about Pakistan deny to play in india for World Cup

Images are subject to © copyright to their respective owners.

மேலும் ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறலாம் எனவும் அவர் ஆருடம் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்பு நடத்த இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. ஆசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் அடுத்த மாதம் ஒன்றுகூடி இதுபற்றி கலந்தாலோசிக்க இருக்கின்றன. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | என்ன ரங்கா பழசை மறந்துட்டியா.. சீண்டிய ஆஸி.. ஆகாஷ் சோப்ராவின் பங்கமான கமெண்ட்😅..!

Tags : #CRICKET #ASHWIN #RAVICHANDRAN ASHWIN #PAKISTAN #WORLD CUP #INDIAN TEAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. R Ashwin about Pakistan deny to play in india for World Cup | Sports News.