"மொத்தமா ₹200 கோடிக்கும் மேல.." லாட்டரியில் இருந்த சின்ன 'ட்ரிக்'.. அத கரெக்ட்டா கண்டுபிடிச்சு பல தடவ பணம் ஜெயிச்ச வயதான தம்பதி..
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகத்தில் உள்ள பல நாடுகளில், லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்ட பூர்வமாகவே செயல்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல், இந்த லாட்டரி டிக்கெட் வாங்கும் போது, பலருக்கும் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான பரிசு தொகை அடிப்பதை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஏராளமான வெளிநாடுகளில் கூட சராசரி வாழ்க்கை வாழ்ந்து வரும் நபர்கள் பலரின் வாழ்க்கை, அப்படியே லாட்டரியில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் வாழ்க்கையை புரட்டி போடுவது தொடர்பாக நிறைய செய்திகளை நாம் கேட்டிருப்போம்.
மேலும், இந்த லாட்டரியின் விதிமுறைகள் என்பது ஒவ்வொரு நாட்டிலும், மிக வித்தியாசமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டும் வரும். அந்த வகையில், US பகுதியை அடுத்த வயதான தம்பதி, லாட்டரி டிக்கெட்டில் உள்ள சிறு தந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம், 23 மில்லியன் பவுண்டுகள் வரை அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மிச்சிகன் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஒன்றை சேர்ந்தவர் ஜெர்ரி. இவரது மனைவியின் பெயர் மார்கே செல்பி. கடந்த 2003 ஆம் ஆண்டு, தங்களின் கடை ஒன்றை விற்பனை செய்து விட்டு, பின்னர் தங்களின் 60 களில் ஓய்வு எடுக்கவும் முடிவு செய்தனர். அப்போது, தனது பழைய கடைக்கு ஒருமுறை சென்று வரவும் ஜெரி முடிவு செய்துள்ளார். அப்படி அவர் அங்கே சென்று விட்டு திரும்பி வரும் போது, புது லாட்டரி விளையாட்டு ஒன்றையும் ஜெரி கவனித்துள்ளார்.
கணக்கில் இளங்கலை பட்டம் பெற்றிருந்த ஜெரி, லாட்டரியில் உள்ள தந்திரத்தை கணிதம் மூலம் முறியடிக்க முடியும் என்றும் முடிவு செய்துள்ளார். ஒரு நபர் லாட்டரியில் ஆறு எண்களையும் அடிக்கும் வரை, ஜாக்பாட்ட முடியாமல் பரிசுத் தொகை கூடிக் கொண்டே இருக்கும். அப்படி ஐந்து மில்லியன் டாலர்களை எட்டும் போது, ஆறு எண்களை யாரும் பொருத்தவில்லை என்றால், ஐந்து அல்லது நான்கு எண்கள் பொருத்திய நபர்களுக்கு லாட்டரியில் உள்ள பரிசு கிடைக்கும்.
இதிலுள்ள தந்திரத்தை கண்டுபிடித்த ஜெரி, 3 முதல் 5 நிமிடங்களில் அதிலுள்ள எண்களை கண்டுபிடித்து விடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, தனது கணித மூளையை பயன்படுத்தி வந்த ஜெரி மற்றும் மார்கே ஆகியோர், பல முறை லாட்டரி குலுக்கலில் வென்று, மொத்தம் 23 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 200 கோடிக்கும் மேல்) வரை அவர்கள் லாட்டரி மூலம் வென்றுள்ளனர்.
பலரும், ஒரு முறை லாட்டரியில் பரிசு வெல்லவே அவதிப்படும் போது, ஜெரி - மார்கே தம்பதி, 23 மில்லயன் பவுண்டுகளை வென்றுள்ளது, பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இவர்களின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு, "Jerry & Marge Go Large" என்ற திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "ஊர் ஊரா போய் கல்லறையை பாக்குறது தான் இவரு வேலையே.." வியப்பில் ஆழ்த்தும் நபர்.. "அட, இது தான் காரணமாம்"

மற்ற செய்திகள்
