லாட்டரியில் அடிச்ச ஜாக்பாட்.. மொத்த பணத்தையும் கிழிச்சு கழிவறையில் வீசிய பெண்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு லெட்டர் தானாம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் தனக்கு லாட்டரியில் அடித்த மொத்த ஜாக்பாட் தொகையையும் கழிவறையில் கிழித்து வீசியதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இது ஜெர்மனி முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read | Chess Olympiad 2022 நிறைவு நாள்.. சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து பார்த்த முதல்வர்..
லாட்டரி
ஜெர்மனியில் அரசு அனுமதியுடன் லாட்டரி விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், சில நேரங்களில் எழும் கோபத்தினால் அரிய பொக்கிஷங்களை கூட தூக்கி எரியும் குணம் சிலருக்கு வந்துவிடுகிறது. அப்படித்தான் நடந்திருக்கிறது ஜெர்மனியை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கும். இவர் தனக்கு லாட்டரியில் பரிசாக கிடைத்த மொத்த பணத்தையும் கழிவறையில் கிழித்து வீசியிருக்கிறார். இதனை நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார்.
ஜெர்மனியின் எஸ்ஸன் நகரை சேர்ந்தவர் ஏஞ்செலா மேயர். இவருக்கு 63 வயதாகிறது. உடல்நிலை சரியில்லாத கணவனை பிரிந்து வாழ்ந்த இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு லாட்டரி மூலம் 330,000 யூரோக்கள் கிடைத்திருக்கிறது. உள்ளூர் கடை ஒன்றில் இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட் மூலமாக இந்த அதிர்ஷ்ட பரிசு இவருக்கு கிடைத்திருக்கிறது.
போதை
தனக்கு பரிசு விழுந்ததை கொண்டாட நினைத்த மேயர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கிறார். முழு போதையில் வீட்டுக்கு திரும்பிய நேரத்தில் அவருக்கு ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. இறந்துபோன அவருடைய கணவரை கவனித்துக்கொண்ட முதியோர் இல்லம் அனுப்பிய அந்த கடிதத்தில் பாக்கி தொகையை செலுத்துமாறு கூறப்பட்டிருக்கிறது. தனக்கு லாட்டரியில் பணம் கிடைத்ததை அறிந்துகொண்டுதான் முதியோர் இல்லம் இப்படியான முடிவில் இறங்கியுள்ளது என்பதாக நினைத்த மேயர், விபரீத முடிவினை எடுத்திருக்கிறார்.
தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கிழித்து வீட்டில் இருந்த கழிவறையில் வீசி Flush செய்திருக்கிறார் அவர். இந்த விஷயம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மது போதையில் பணத்தினை அழித்ததால் அதனை குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், இந்த வழக்கில் இழப்பீடாக 4,000 யூரோக்களை செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது. இதனை மேயரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ஜெர்மனி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.