தப்பான லாட்டரி டிக்கெட் வாங்கிட்டோம்னு வருத்தப்பட்ட பெண்.. ஆனா கடைசில நடந்த ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தவறுதலாக வேறு ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பெண்ணிற்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.

மிஸ்டேக்
அமெரிக்காவை சேர்ந்த லக்வெட்ரா எட்வர்ட்ஸ் என்னும் பெண்மணி கடந்த ஆண்டு நவம்பரில் லாட்டரி டிக்கெட் வாங்க சென்றிருக்கிறார். அவ்வப்போது லாட்டரி வாங்கும் வழக்கமுள்ள எட்வர்ட்ஸ் மிஷின் மூலமாக லாட்டரியை பெற நினைத்திருக்கிறார். அப்போது தனக்கு வேண்டிய லாட்டரியின் பெயரை தேர்ந்தெடுக்க முயற்சிக்கையில் ஒரு நபர் எட்வார்ட்ஸ்-ஐ இடித்திருக்கிறார். இதனால் தவறுதலான பட்டனை அவர் அழுத்த வேறு ஒரு லாட்டரி டிக்கெட் கிடைத்திருக்கிறது.
லாட்டரி
அமெரிக்காவில் லாட்டரி விற்பனை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதிக்க பல்வேறு மக்கள் இந்த லாட்டரிகளை வாங்கி வருகின்றனர். பணத்தை உள்ளீடு செய்து தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை பெறும் வகையில் இயங்கும் லாட்டரி வெண்டிங் மிஷின்கள் அங்கே பிரபலம். பெரும்பாலான மக்கள் இதன் மூலமாகவே லாட்டரியை வாங்குகிறார்கள்.
லக்வெட்ரா எட்வர்ட்ஸ்-ம் அப்படியான ஒரு மிஷினில் டிக்கெட் வாங்க காத்திருக்கும் போதுதான் கடைக்குள் வந்த நபர் அவர் மீது மோதியிருக்கிறார். 40 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டிக்கெட்டை வாங்க எட்வர்ட்ஸ் நினைத்திருக்கிறார். ஆனால் அப்போது நடந்த களேபரத்தால் $30 200X டிக்கெட் அவருக்கு கிடைத்திருக்கிறது.
அதிர்ஷ்டம்
ஆனால், எட்வர்ட்ஸ் தவறுதலாக வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய்) பரிசாக விழுந்திருக்கிறது. இதுபற்றி அவர் பேசுகையில்," தவறான டிக்கெட் கிடைத்தால் நான் கோபமடைந்தேன். அதன் பிறகு அந்த டிக்கெட்டை சுரண்டி அதனை ஸ்கேன் செய்தபோது 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்திருப்பதாக காட்டியது. நான் அதனை நம்பவில்லை. மீண்டும் மீண்டும் அதனை ஸ்கேன் செய்து பார்த்தேன். இறுதியில் நான் சரியான டிக்கெட்டை தான் வாங்கியிருக்கிறேன் என துள்ளிக்குதித்தேன்" என்றார்.
திட்டம்
லாட்டரி மூலமாக தனக்கு கிடைத்த 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை கொண்டு, வீடு ஒன்றை வாங்க இருப்பதாக கூறுகிறார் எட்வர்ட்ஸ். இது பற்றி அவர் பேசுகையில்,"எனக்கான ஒரு கனவு இல்லத்தை வாங்குவேன். அதன் பிறகு லாப நோக்கமில்லாத ஒரு நிறுவனத்தை துவங்க இருக்கிறேன்" என்றார்.
தவறுதலாக வேறு லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பெண்மணிக்கு 10 மில்லியன் டாலர்கள் பரிசாக கிடைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மற்ற செய்திகள்
