"கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே கோடீஸ்வரரான புதுமாப்பிள்ளை...." ஆனந்த கண்ணீர் விட்ட மனைவி.. எப்படி.?
முகப்பு > செய்திகள் > உலகம்சிலருக்கு எல்லாம் வாழ்க்கையில் எந்த நேரத்தில் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் என்பதே தெரியாது. எதிர்பாராத நேரத்தில், கூரையை பிய்த்துக் கொண்டு, கோடிக்கணக்கில் பணம் கொட்டியும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அந்த வகையில், இளைஞர் ஒருவர் திருமணமான மறுநாளே, கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம், பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த இளைஞரான ரீஸ், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் துபாய்க்கு குடி பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமணமான அடுத்த நாளுலேயே..
தொடர்ந்து, அங்குள்ள ஜிம் ஒன்றில் மேலாளராக அவர் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் தனது பிரிட்டன் காதலியையும் ரீஸ் திருமணம் செய்துள்ளார். தனது காதலியை திருமணம் செய்த மறுநாளே ரீஸுக்கு ஒரு அதிரடி அதிர்ஷ்டம் காத்திருந்தது. Mahzooz டிராவில் இருந்து லாட்டரி ஒன்றை ரீஸ் எடுத்துள்ளார்.
தொடர்ந்து, தனது திருமணத்திற்கு மறுநாள் அந்த லாட்டரியை வென்ற நபர் யார் என்ற விவரத்தை இணையத்தில் பார்த்துள்ளார் ரீஸ். அப்போது அவர் வாங்கி இருந்த லாட்டரி எண்ணுக்கு, முதல் பரிசு அடித்துள்ளது. மொத்தம், 10 மில்லியன் திர்ஹாம் பரிசுத் தொகையை ரீஸ் வென்றுள்ளார். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ஆகும்.
"அவளுக்கு கண்ணீரே வந்துடுச்சு.."
இதுகுறித்து பேசும் ரீஸ், "எனக்கு பரிசடித்த தகவலை அறிந்ததும் ஒரு நிமிடம் அப்படியே நான் உறைந்து போய் விட்டேன். பின்னர், இது தொடர்பாக எனது மனைவியிடம் நான் விஷயத்தை சொன்னதும் அவர் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரே வடிக்க ஆரம்பித்து விட்டார். வெற்றி பெற்ற அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அதே போல, இத்தனை பெரிய தொகை பரிசாக பெற்றதும், பிரிட்டனில் உள்ள எங்களது பெற்றோர்களுக்கும் தகவலை தெரிவித்தோம். அவர்களும் ஒரு நிமிடம் இந்த தகவலை நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்" என தெரிவித்தார்.
ஒரு வீடு வாங்கணும்..
தான் வென்ற பரிசுத் தொகையை பயன்படுத்த போவது பற்றி பேசிய ரீஸ், "எங்களுக்கு கிடைத்த பரிசு தொகையை கொண்டு துபாயில் வீடு ஒன்றை வாங்க போகிறோம். மேலும், எனது மனைவிக்கு புதிய பிராண்ட் கார் ஒன்றையும் பரிசளிக்க நான் விரும்புகிறேன். மீதமுள்ள பரிசுத் தொகையை சரியான முறையில் பயன்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தை இந்த வெற்றி பரிசுத் தொகை திறந்து வைத்துள்ளது" என ஆனந்தத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை பெரிய தொகையை பரிசாக பெற்றாலும், தொடர்ந்து தான் உடற்பயிற்சி கூடத்தில் பணிபுரிய போவதாகவும், ரீஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
