நமக்கா பரிசு கிடைக்கபோகுது.. லாட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசிய பெண்ணுக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஆனா லாஸ்ட்ல நடந்தது தான் ஹைலைட்டே..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசியுள்ளார். ஆனால், அந்த டிக்கெட்டிற்கு 76 லட்ச ரூபாய் ஜாக்பாட் பரிசு அடித்துள்ளது.

Also Read | மாடுகளுக்கு மாஸ்க்.. இது கொரோனாவுக்காக இல்லயாம்.. மாடுகள்ல இப்படி ஒரு விஷயம் இருக்கா..!
லாட்டரி
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லாட்டரி விற்பனை அந்தந்த அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியாவிலும் அப்படித்தான். அங்கே, 5 டாலர் விலையில் ஸ்பெஷல் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார் ஒரு பெண்மணி. அதனை வீட்டுக்கு கொண்டுசென்ற அவர் தனது கணவரிடம் காண்பித்துள்ளார். பின்னர் அதனை ஸ்க்ராட்ச் செய்து அதில் உள்ள எண்களை அறிந்த பின்னர் தனக்கு பரிசு கிடைக்காது என தோன்றியதால் அதனை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.
ஜாக்பாட்
தனக்கு பரிசு கிடைக்காது என நினைத்து, அந்த பெண் குப்பை தொட்டியில் தூக்கி எறிந்த லாட்டரி டிக்கெட்டிற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 76 லட்ச ருபாய்) பரிசு விழுந்திருக்கிறது. கோல்டன் எடிஷன் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த நிறுவனம் பரிசு பெற்றவர்களின் பெயரை அறிவித்ததும் அந்தப் பெண் மயக்கமடையும் அளவுக்கு அதிர்ந்துப்போனார்.
கணவர் தந்த சர்ப்ரைஸ்
இதனிடையே, அவநம்பிக்கையால் தனது மனைவி தூக்கியெறிந்த லாட்டரி டிக்கெட்டை அவரது கணவர் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். அதை சர்ப்ரைஸாக மனைவியிடம் நீட்டி, "உனக்கு பரிசு கிடைத்திருக்கிறது" என அவர் கூறியுள்ளார். தன்னுடைய கண்களை நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் அந்த டிக்கெட் தானா? என சோதனை செய்த பிறகு ஆனந்தத்தில் துள்ளி குதித்திருக்கிறார் அந்தப் பெண்.
தான் இதுவரையில் இதுபோன்ற பரிசுகளை வென்றதில்லை எனக் கூறும் அவர், இந்த பணத்தினைக்கொண்டு கார் வாங்க இருப்பதாகவும் தனது குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு பயன்படுத்தப் போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
தனக்கு பரிசு கிடைக்காது என நினைத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசிய பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக 76 லட்ச ரூபாய் கிடைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
