VIDEO: இரவு-பகலாக 'இயங்கும்' இடுகாடுகள்... களமிறங்கிய 'கியூபா' மருத்துவர்களால் ... படிப்படியாக குறையும் கொரோனா 'இறப்பு' விகிதம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Mar 24, 2020 04:23 PM

இத்தாலி மக்களுக்கு சற்றே ஆறுதல் தரும் விதமாக கொரோனா தொற்று அங்கு படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது.

New coronavirus cases drop in Italy for second day

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில்  கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவிட்டது. இதுவரை 6077 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அதேபோல 63,927 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மக்கள் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்ததால் அங்கு இறந்தவர்களை எரிக்கக்கூட வழியில்லாமல் சவப்பெட்டிகள் குவிந்து கிடந்த காட்சி உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.  இறந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவ வாகனங்கள் ஈடுபட்டன. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது.

சீனாவை விட இத்தாலியில் தான் கொரோனாவின் கோரத்தாண்டவம் உக்கிரமாக இருந்தது. இதையடுத்து இத்தாலியில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர சீன மருத்துவர்கள் களமிறங்கினர். அவர்கள் இத்தாலிக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி இருந்தனர். எனினும் அங்கு கொரோனா நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே இருந்தது. உச்சகட்டமாக 2 நாட்களில் 1420 பேர் பலியாகினர். இது உலக நாடுகளை அதிர வைத்தது. தற்போது கியூபா நாட்டு மருத்துவர்கள் இத்தாலிக்கு உதவ முன்வந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன் கியூபா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கியகுழு ஒன்று  இத்தாலி நாட்டுக்கு வந்திறங்கியது.

இந்த நிலையில் மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக கொரோனா தொற்று மற்றும் இறப்பு விகிதம் இரண்டும் இத்தாலியில் படிப்படியாக தற்போது கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு 21-ம் தேதி 793 பேர் பலியாகினர். தொடர்ந்து 22-ம் தேதி 651 பேரும் 23-ம் தேதி 601 பேரும் இறந்துள்ளனர். அதே போல், கொரோனா தொற்று பரவும் வேகமும் குறையத் தொடங்கியுள்ளது. 22-ம் தேதி 5,560 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 23-ம் தேதி 4,789 என்ற அளவில் புதியவர்களுக்கு கொரோனா தொற்றியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில் இதை முழு வெற்றி என்று சொல்ல முடியாது என்றாலும், இதனால் இத்தாலி மருத்துவத்துறை புதிய உற்சாகம் அடைந்துள்ளது.

Tags : #HOSPITAL