அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவிக்கு ‘கொரோனா பரிசோதனை’.. வெளியான ரிசல்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப்பிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சீனா, இத்தாலி, ஈரானுக்கு அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி இருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதே நாளில் மெலானியா டிரம்ப்க்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
