‘உலகமே லாக் டவுனில்’... ‘சுழட்டி எடுக்கும் கொரோனா பாதிப்பிலும்’... ‘விண்வெளி சென்ற இருநாட்டு வீரர்கள்’...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 10, 2020 02:34 AM

உலகமே கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் சூழலிலும், சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்சிக்காக 3 பேர் கொண்ட குழுவின் ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

NASA Astronaut Chris Cassidy, Crewmates Arrive Safely at Space Station

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அந்நாட்டை புரட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்வெளி வீரர் Chris Cassidy, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் Anatoly Ivanishin மற்றும் Ivan Vagner  உள்ளிட்ட வீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகனூர் விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி ஆரய்ச்சி மையம் சென்றனர். விண்கலம் புறப்பட்ட வீடியோ காட்சியை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிவேற்றியுள்ளது.

கொரோனா பாதிப்பு இரு நாடுகளிலும் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக விண்வெளி வீரர்கள் கடும் கட்டுபாடுகளுடன் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்தப்படுதிக்கொண்டனர். இவர்கள் தற்போது வரை நல்ல உடற்தகுதி இருந்ததையடுத்து விண்வெளிக்கு பயணமாயினர் என நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள ரஷ்ய, அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூன்று பேர் அங்கிருந்து புறப்பட்டு பூமிக்கு வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரும்புகின்றனர்.