இனி ஸ்விக்கி, சொமாட்டோவில்... ஆவின் பால், ஐஸ்கிரீம், தயிர், குளோப்ஜாமூன்... எல்லாமே 'ஆர்டர்' பண்ணலாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 10, 2020 12:07 AM

கொரோனா காரணமாக தற்போது உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு அரசு நேரக்கட்டுப்பாடு விதித்து உள்ளது. இதனால் காலை, மதியம், இரவு ஆகிய 3 நேரங்களிலும் ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கி வருகின்றன.

Aavin Plan to sell Milk and Milk Products in Swiggy and Zomato

இந்த நிலையில் ஆவின் பால் மற்றும் ஆவின் பொருட்களை ஸ்விக்கி, சொமாட்டோ வழியாக மக்களுக்கு விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மக்களுக்கு தங்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் முன்னதாக 'சூப்பர் டைலி ஆப்' என்னும் தனியார் நிறுவனம் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் வழியாக பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

ஆவின் பால் மற்றும் நெய், ஐஸ்கிரீம், குலோப்ஜாம், குளிர்பானங்கள், மைசூர்பாகு, லஸ்ஸி, தயிர், மோர் போன்ற பொருட்களை மேற்கண்ட நிறுவனங்களின் வழியாக ஆர்டர் செய்தால் அந்த பொருட்கள் உங்களின் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். இதுகுறித்து ஆவின் நிர்வாகி ஒருவர் இன்னும் ஒருசில நாட்களில் ஆவின் பொருட்கள் ஸ்விக்கி, சொமாட்டோ வழியாக உங்கள் வீடு தேடி வரும் என தெரிவித்து இருக்கிறார்.