‘இப்படி ஒரு ட்ரிக்ஸா?’.. ‘எச்சில் உமிழ்ந்து, ரூ.1.37 மதிப்புள்ள பொருட்களை எடுத்து வைத்துக்கொண்ட பெண்!’.. ஆடிப்போன சூப்பர் மார்க்கெட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 09, 2020 10:17 PM

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற 53 வயது பெண்மணி ஒருவர் செய்த காரியம், திகைப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.

US woman licked groceries worth Rs 1.37 lakh amid Covid19

அமெரிக்காவின் லாஸ் எஞ்சல்ஸ் நகரில், சூப்பர் மார்க்கெட்டுக்கு போன பெண் ஒருவர் மளிகை , பலசரக்கு, மது உள்ளிட்ட பொருட்களை எல்லாம் தனது கார்ட் வண்டியில் எடுத்து அடுக்கிக்கொண்டெ வந்துள்ளார். ஆனால் அவர் எல்லா பொருட்களின் மீது எச்சில் உமிழ்ந்து பின்னர் அதனை தனது கார்ட் வண்டியில் வைத்துக்கொண்டு வந்தது அங்கிருந்த ஊழியருக்கு தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், விற்பனைக்கு இருந்த நகைகளையும் அவ்வாறு எச்சில் உமிழ்ந்து தனது கைகளில் மாட்டிகொண்டு அந்த பெண் வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.  உண்மையில் இவை எதையும் பணம் கொடுத்து வாங்க அப்பெண்ணுக்கு எண்ணமில்லை என்பதையும், கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் காலகட்டத்தில் இவ்வாறு செய்தால் தனக்கான பொருட்களை பணம் தராமலே எடுத்துவந்துவிடலாம் என்பதுதான் அந்த பெண்ணின் நோக்கம் என்பதையும் போலீஸார் கண்டறிந்ததோடு அப்பெண்ணை கைது செய்தனர்.

அமெரிக்காவில் 3.95 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பதும், இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.