'தமிழ்நாட்டில்' கொரோனாவுக்கு பலியான... 'முதல்' நபரின் குடும்பத்தினர் 'பூரண' குணமடைந்தனர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 09, 2020 11:10 PM

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பலியான முதல் நபரின் குடும்பத்தினர் பூரண குணமடைந்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கிறார்.

The First Person Died in TN, Their Family recovered from Corona

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் நபர் மரணமடைந்தார். இதையடுத்து அவர் வசித்த பகுதி தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. இறந்தவரின் வீட்டைச் சுற்றி இருந்த 350-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் இறந்தவரின் இரண்டு மகன்கள் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மதுரை அரசு சிறப்பு மருத்துவமனை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் மூவரும் பூரண குணமடைந்ததால் நேற்று அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வீட்டில் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து 15 நாட்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. மேற்கண்ட மூவரும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததால் தமிழக மக்கள் மத்தியில் சிறிது நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.