“லாக்டவுன் நேரத்துல எங்க வந்தீங்க?”.. வாகன ஓட்டியை நிற்கச்சொன்ன டிராபிக் காவலருக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் டிராபிக் காவலரை வாகன ஓட்டி ஒருவர் வாகனத்தில் மோதி தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் டோங்கிரி பகுதியில் உள்ள சிக்னல் ஒன்றில் டிராபிக் காவலர் லாக்டவுனில் வீட்டுக்குள் இருக்காமல் வெளியே வரும் வாகன ஓட்டிகளை பிடித்து விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாகன ஓட்டி ஒருவர் நிற்காமல் செல்ல, அந்த வாகனத்தை டிராபிக் காவலர் தன் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டார்.
ஆனாலும் வாகன ஓட்டி விடாமல், வண்டியை இயக்கிக் கொண்டே சென்றதால் டிராபிக் காவலர் சிறுது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் இருவருமே நிலைதடுமாறி விழுந்தனர். இதனால் டிராபிக் காவலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ள நிலையில், அதற்கு ஒத்துழைப்பு தந்து சிரத்தையுடன் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு இவ்வாறு நேர்ந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
